என் காதல் கதை

பகுதி II


முதலாம் ஆண்டு முழுவதும் என் காதல் என் படிப்பை சூற்றியும் என் நண்பர்களை சூற்றியுமே அமைந்தது எதனை இனிமையான தருணங்கள் அவை மீண்டும் கிடைக்காத என ஏங்க தோன்றுகிறது

ஆனால் என் இரண்டாம் ஆண்டு நான் என்னவனை சந்தித்தேன் எல்லா பெண்களுக்கும் ஒரு ஆசை உண்டு அதுவே திருமணம் நம் வாழ்கை துணை இவ்வாறு தன இருக்க வேண்டும் என்ற நினைவு இருக்கும் அந்த கனவு நிஜமானது என்னவனின் கண்களை பார்க்கும் போது

ஆனால் என்னால் அவனை நெருங்க முடியா உறவில் அவன் இருந்தான் ஆம் என் ஆங்கில விரிவுரையலானாக .................

என் எண்ணம் என் நண்பர்களுக்கு தெரிந்தது என்னை சரியாக வழிநடத்த பார்த்தனர் காதல் தான் என்றுமே சொல்பேச்சு கேட்பதிலையே
நானும் அதன் பிடியில் சிக்கிக்கொண்டேன்
ஆனால் என் மனம் அவன் அறியக்கூடாது என்பதில் மட்டும் கவனமாய் இருந்தேன்

எந்த ஆண் விரிவுரையலரிடமும் பேசாத நான் என்னவனிடம் மட்டும் என்னை மறந்து பேசினேன் என் தோழிகள் அவனிடம் பேசினால்கூட கோபம் கொண்டேன்

நாட்கள் செல்ல செல்ல நானும் அவனும் நெருங்க ஆரம்பித்தோம் ஆனால் என் தோழிகளுக்கு அது பிடிக்க வில்லை அவர்களுக்கு தெரியாமல் பேசினோம்
அவனுக்கும் என் மனம் புரிந்து போனது காதல் புகை போன்றதாயிற்றே
தவிர எங்களுக்கு வயதும் சம நிலையில் தான் இருந்தது எனவே என் கண்ணே அவனுக்கு காட்டி கொடுத்து விட்டது போலும்

நான் அவனிடம் அதிக உரிமைகள் எடுத்துக்கொண்டேன். அவனிடம் பேசாத நாட்கள் எனக்கு நரகமானது ..........
அவன் கூட இருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் காதல் மெல்ல கசிய ஆரம்பித்தது அவர்களும் இதற்க்கு மறுப்பு சொல்லவில்லை
மாறாக எங்களை சேர்த்து வைத்து செல்லமாக கேலி பேசி எங்களை வெட்கம் கொள்ள செய்தனர்

என் தோழிகள் மட்டுமே இது வேண்டாம் என எனக்கு அறிவுரை கூறினர் அன்றே அதை கேட்டிருக்கலாம்

எழுதியவர் : (30-Aug-13, 10:43 am)
சேர்த்தது : nilamagal
Tanglish : en kaadhal kathai
பார்வை : 324

மேலே