என் காதல் கதை

பகுதி IV

.................. ஒரு நாள் அவனிடம் மனம் விட்டு பேச அவனுக்கு குறுஞ்செய்தி அனுபினேன் அவனும் பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்
மெல்ல அவன் குணம் அறிய எதகையோரிடம் நீங்கள் பேசுவிர்கள் என கேட்டேன்
" உனக்கு அது தேவை இல்லை நீ சென்று உன் படிப்பை பார் " என கூறிவிட்டான் .
அந்த நிமிடமே என் கண்கள் குளமானது நான் தான் அவன் மீது தவறான எண்ணத்தை வளர்த்து கொண்டேன் போலும் என நினைத்து அவனிடம் மன்னிப்பு கேட்டேன் அவனும் மன்னித்தான்
ஆனாலும் எனக்கு வருத்தம் போக வில்லை அவனை நேரில் கண்டு மன்னிப்பு கேட்க சென்றேன்
ஆனால் அவன் முகத்தில் சிறிதுகூட கோபமில்லை அளவுகடந்த மகிழ்ச்சியில் இருந்தான்
நான் வழக்கம் போல என் சிறு பிள்ளை தனத்தை அவனிடம் காட்டி மன்னிப்பும் பெற்று கொண்டேன்
இனி வாழ்வில் அவனுக்கு தேவையில்லாமல் குறுசெய்தியோ, அழைப்போ கொடுக்க கூடாது
என் நண்பர்கள் பேச்சை கேட்க வேண்டும் இனி அவனை பார்க்க கூடாது அவன் மீது காதல் கொள்ள
கூடாது என்றெல்லாம் முடிவுகள் எடுத்தேன்
அது முழுதாக ஒரு வாரம் குட நிலைக்க வில்லை
மீண்டும் மீண்டும் என் மனம் அவனை தான் நாடியது மதிய இடைவெளியில் அவனை தேடி போக ஆரம்பித்தேன் எனக்கென்று ஒரு காரணம் இருந்தது இல்லாத போதிலும் உருவாக்கி கொண்டேன்
அவனும் என் மனம் அவனை நாடுகிறது என நன்கு அறிவன் ஆனால் அறியாதவன் போல பாசாங்கு செய்வான் நான் வரும் தருணங்களில் புன்னகை செய்வான் சில முதலாம் ஆண்டு தோழிகள் அதை என்னிடம் கூறுவார்
நாட்கள் செல்ல செல்ல எனக்கு அவன் மீது ஈர்ப்பு அதிகமானது அவனின்றி இன் என் வாழ்வில் எதுமே இல்லை என ஆகிவிட்டது
இந்த தருணத்தில் ஒரு செய்தி என் தலையில் இடியாக இறங்கியது ...................

எழுதியவர் : நிலா மகள் (30-Aug-13, 11:12 am)
சேர்த்தது : nilamagal
Tanglish : en kaadhal kathai
பார்வை : 180

மேலே