உன் வயிற்றில் பிறந்தது என் பிழை தான் அம்மா ....

துன்பம் என்றால் கண்ணீரும்
எனக்கு துணைக்கு வருகுது
நீ இல்லை ஏன் அம்மா?
ஒருமுறை என்னை பிள்ளை என்றும்
பார்க்காமல் இங்கு வீசி
சென்றவள் யாரம்மா இனி
நான் வேசி மகன் தான் அம்மா ,

மண்ணில் வந்தவுடன் பிரிவினை எனக்கு
வந்ததோ இது என் பிழை தானம்மா ,

பத்து மாதம் கருவில் சுமந்து
ஏனோ இன்று பாதாள கிணற்றிலோ
குப்பை தொட்டியிலோ வீசிசென்ற
காரணம் ஒருமுறை சொல்லம்மா,

இது என் விதி தான் அம்மா
அதனால் வீதியில் இன்று நான் அம்மா ,

தொப்புள் கொடியின் ஈரம் இன்னும்
காயவில்லை இருந்தும் பசி எனக்கு வந்த உடன்
உன் மாராபினை தேடுறேன் என் பிள்ளை
என்று ஒருமுறை என்னை பாரம்மா உனக்கு
நான் பாரமாசொல்லி சென்றிடு அம்மா ,

நீ பெற்ற மகிழ்ச்சியில்
நான் இன்று துன்பத்தில் வாடுகிறேன்
உன் வயிற்றில் பிறந்தது
என் பிழை தான் அம்மா ....

இனி எனக்கு ஊரார் வைத்திடும் பெயர்
என்னவென்று உனக்கு தெரியும் தானம்மா
என்னை வெறுத்து வீச காரணம் என்னம்மா ,

குப்பை தொட்டியில் நாய்கள்
என்னை கடித்து தின்றிடும் அழகை
பாரம்மா இது காலத்தின் பிழை
தான் அம்மா ,

வந்த நாளே அழகிய பூமியில்
உன்னை விட்டு செல்கிறேன்
ஒருமுறை என்னை காண வாராயோ
என் கடைசி அழைப்பு கேளாயோ ?



(குழந்தைகளை காத்திடுவோம் ஒன்று சேர்த்திடுவோம் குழந்தையின் எதிர் காலத்திற்காக இனி அனாதை என்ற வார்த்தையை ஒழித்திடுவோம்)

எழுதியவர் : ப்ரியாஅசோக் (30-Aug-13, 6:56 pm)
பார்வை : 193

மேலே