காதலன் வாக்கு மூலம்..!
மழை துளி கொண்டு மட்டும் முளைகின்ற
விதைகள் பலதுண்டு இந்த மண்ணில்...!
காதல் மொழி கொண்டு மட்டும் வாழ்கின்ற
ஜீவன் சிலதுண்டு இந்த மண்ணில்..!
என் காதலை மறுத்த காதலியே
என் கடைசி ஆசை இதை நிறைவேற்று..!
எனை காலன் அழைக்க வரும் நேரம்
என் அருகினில் சற்று இருப்பாயா..?
உந்தன் கனவுகள் சுமந்து கனத்த மனசு உன்
வரவை கண்டு அடங்கட்டும்..!
உன் காதல் வேண்டி நடந்த வழியே என்
பாதம் இரண்டும் குளிரட்டும்..!
உள்ளே இழுக்கின்ற இறுதி மூச்சில் உந்தன்
வாசனை சுகந்தம் உணரட்டும் !
ஒருபோதும் திறவா இமை இரண்டும் உன்
நிலாமுகம் நிறைந்து மூடட்டும்..!
ஒலிகள் கேட்கா செவிமடல் இங்கு உன்பேச்சு
ஒலி கேட்டு அடைக்கட்டும்..!
அசையும் விரல்கள் உன் கரம் வருடி
அமைதி பெற்று அமரட்டும்..!
அன்பே என்னிதழ்கள் இறுதியாய் உன் பெயர்
முணுமுணுத்தே நிறுத்தட்டும்..!
அறிவு சுடர் விட்ட என் சிரசில் உன் விழி நீரில்
சில துளிகள் பதியட்டும்..!
மரணம் அழைகின்ற நேரம் நீ என்
அருகில் சற்று இருப்பாயா..?
உன் உணர்வோடு புதைந்து மண்ணுக்குள்
உறங்க சென்றால் போதுமடி... !
மழைதுளி கொண்டு மீண்டும் முளைவிட்டு
மறுபடி வருவேன் உன் முன்னிலடி.!
அன்றும் அடியேன் காதலிப்பேன்..
அந்த காதலில் நீதான் என் கன்னியடி..!