என் காதல் தேடல் ///////////////////////

ஒரு அந்தி மழைகாலம்
என் ஜன்னலோரம்
சாரல் போல நீயும்
சில்லென கவிதை பாடும்
உன் விழிகள் பாடும் ...........

மௌனம் கூட கீதம்
மனத்தால் அறிந்தேன் நானும்
காற்றாய் உந்தென் நேசம்
நித்தம் கதைகள் பேசும் நேரம்
என் ஆசை ஊஞ்சல் ஆடும்
பேசிமுடித்து நீயும்
பிரியும் அந்த நேரம் என் உயிர்
உன்னைத்தேடி போகத்தானே வேணும்
காதல் தேடல் நாளும்
என் உயிர் உள்ளவரை நீளும்

எழுதியவர் : ருத்ரன் (30-Aug-13, 8:51 pm)
பார்வை : 44

மேலே