அவள் வேறொருவன் மனைவி

அன்று அவன் அவளுடன் இருக்கவில்லை
அவளோ கர்ப்பமானால்
அவன் பொறுத்துக் கொண்டான்
என்னெனில்
அவன் அவளுக்கு யாரோ

சில நாளின் பின்
அவளுடன் அவன் இருக்கவில்லை
அவளோ கர்ப்பமானால்
அவனோ சீற்றம் கொண்டான்
என்னெனில்
அன்று அவன் காதலன்

இன்று அவன் அவளுடன்
இருந்து கொண்டான்
அவள் கர்ப்பமானாள்
அவன் பொறுத்துக் கொண்டான்
எனினும்
அன்றும் இன்றும் என்றும்
அக்குழந்தையின் தந்தை
அவனாக முடியாது
ஏனெனில்
அவளிற்கு அவன் பகுதி நேர கணவன்
அவள் வேறொருவன் மனைவி.

எழுதியவர் : காவலூர் john (30-Aug-13, 10:23 pm)
சேர்த்தது : காவலூர் john
பார்வை : 98

மேலே