பெருக்கலும் வகுத்தலும்

கவின்மிகு காட்சிகள்
தோன்றும் மறையும்
களிப்புறும் அழகு
இருந்து போகும்
காட்ட மிகு வார்த்தைகள்
நின்று கொல்லும்
அளவில்லா பொய்
தொடர்ந்து கெடுக்கும்
அதிகாரமான பாவம்
அலம்பலாக அழிக்கும்.
அநேகமான சந்தேகம்
அமர்த்தலாக வெடிக்கும்
கனிவான சொல்
கணமும் கொழிக்கும்
நேர்மையான நிரல்
நெஞ்சோடு குவியும் .
உண்மை வாழ்க்கை
நிறைவோடு நிரம்பும்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (31-Aug-13, 3:37 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 90

மேலே