காதலுக்கு பால்...

அவன் அவளுக்காக
அவன் வீட்டில்
சம்மதம் கேட்டான்...

அவள் அவனுக்காக
அவளது வீட்டில்
சம்மதம் கேட்டாள்...

இறுதியில்
இருவருக்கும்
பால் ஊற்றப்பட்டது....

உடல்களை
எரிப்பதா
புதைப்பதா....?

இதற்கும்
சம்மதம்
கிடைக்கவில்லை...!

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (31-Aug-13, 3:59 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : kaathalaukku paal
பார்வை : 130

மேலே