எனது சிரிப்பு
வந்தது இன்பம் அன்று
வாய்விட்டு சிரித்தேன் நன்று..!
வந்தது சுயநலம் இன்று
வாய்விட்டு சிரித்தேன் இன்று..!
அதுவும் சிரிப்பு இதுவும் சிரிப்பு
அதனால் ரெண்டும் ஒன்றாகுமா ?
தீர்த்தம் வேறு தண்ணீர் வேறு
தெய்வத்தின் முன்னே தன்னலம் வெல்லுமா ?!
நினைவுகள் அற்ற நெஞ்சம் வேண்டும்
நிலவினில் கவிதை எழுதிட வேண்டும்
இறைவனே எனக்கு வரமொன்று வேண்டும்
வெள்ளையாய் மனது இருந்திட வேண்டும்
வேண்டுமட்டும் நான் சிரித்திட வேண்டும்....
வேண்டுமட்டும் நான் சிரித்திட வேண்டும்....
பைத்தியம் என்று பார்ப்பவர் சொல்வர்
பகவானே உனக்கு நான் பாலனாய் தெரிவேன்
பார்வைகள் என்னை கொன்றால் கொல்லட்டும்
பரம்பொருளே என்னை மீண்டும் சிரிக்க வை.....
அன்று போல்
அன்று போல்
அன்று போல்.......!