என்றுதான் தணியுமோஅயல் பண்பாட்டுத் தாகம்????
என்றுதான் தணியுமோஅயல்
பண்பாட்டுத் தாகம்
தின்றுதான் தீர்த்திடுமோஇவர்
பன்னாட்டு மோகம்
என்னதான் செய்வதோ
தன்னிலை மறந்தோரை..
என்னிறைவா அருள்கவேஇவர்
மனப்போதை இறங்கவே....
ஆடையை மாற்றினிர்...
அன்னையை மாற்றுவீரோ...
வாடையை மாற்றினிர்
வாய்த்தஉடலை மாற்றுவீரோ....
உணவெல்லாம் மாற்றினிர்...
உண்டிப்பசியினை நீக்குவீரோ...
உற்றதுணை மாற்றினிரே...
உடற்பசியினின் நீங்குவீரோ...
இயல்பொழிந்த பின்னேநம்
இனமழிந்து போகும்
இன்னுமென்ன தணித்திடுஉன்
பண்பாட்டுத் தாகம்
என்றுதான் தணியுமோஅயல்
பண்பாட்டுத் தாகம்
தின்றுதான் தீர்த்திடுமோஇவர்
பன்னாட்டு மோகம்
தோட்டத்தின் எழிலே
பலவகை மலர்கள்தான்
காட்டுக்கு அழகே
கணக்கற்ற மரவகைதான்-மேகக்
கூட்டத்தின் வனப்பே
பலவகை வடிவம்தான்
வட்டநிலா வடிவழகே
தினந்தோறும் வேறுதான் -புவி
ஓட்டிற்கு பொலிவே
மாறும்நிலத் தோற்றம்தான்
நாட்டுக்கு அழகே
வேறுபட்ட மதங்கள்தான்-இசைப்
பாட்டுக்குச் செழுமை
பலவகைச் சந்தம்தான்
வானவில்லின் அழகேஅதன்
வண்ணங்களின் வேறுபாடு
வாதத்திற்கு அழகோஉள
கருத்துகளின் மாறுபாடு
உணவின் சிறப்பேஅதன்
சுவைகளின் வேறுபாடு
மனதின் சிறப்போஅதன்
குணங்களின் மாறுபாடு
பிறப்புக்கு வித்தோ
பாலின வேறுபாடு
திறமெனச் சிறப்பதோ
சுற்றத்தில் தனிப்பாடு
காலத்திற்கு மோகனம்
காற்றுத்திசை மாறுபாடு-இந்த
ஞாலத்திற்கு வேண்டுமே
பலதரப்பட்ட பண்பாடு...
இயல்பொழிந்த பின்னேநம்
இனமழிந்து போகும்
இன்னுமென்ன தணித்திடுஉன்
பண்பாட்டுத் தாகம்
அறிவினை மூட்டிடுவோம்
கலாச்சாரம் மீட்டிடுவோம்
அருஞ்செயல்கள் புரிந்திடுவோம்
நாமாக இருந்திடுவோம்
என்றுதான் தணியுமோஅயல்
பண்பாட்டுத் தாகம்
தின்றுதான் தீர்த்திடுமோஇவர்
பன்னாட்டு மோகம்