வலி-வழி

வலிஇல்லாமல்
வாழ்க்கை இல்லை
ஆம்
வழி இல்லாமல்
வாழ்க்கை இல்லை
கல்வி ஒருவழி
அதைவலி கொண்டு கற்றுக்கொள்
கடமை ஒருவழி
அதை வலி கொண்டு உணர்ந்துகொள்
திருமணம் ஒருவழி
அதை வலிகொண்டு புரிந்துகொள்
காதல் வலி
அதை வாழ்ந்துபார்த்து
வழிமொழி
அனுபவம் ஒருவழி
அதைவலிந்து சென்று பெற்றுக்கொள்
வீழ்ச்சி என்பது ஒருவலி
மீண்டும் எழுச்சிஎன்பது ஒருவழி
தோல்வி ஒருவலி
மீண்டும் வெ(ற்)றி ஒருவழி
மரணம் ஒருவலி
அனுபவத்தில் இதுஒரு புதுவழி
வலிஇல்லாமல்
வாழ்க்கை இல்லை
ஆம்
வழி இல்லாமல்
வாழ்க்கை இல்லை.

எழுதியவர் : messersuresh (30-Dec-10, 12:13 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 568

மேலே