உன்னை நினைத்த மனம் மரணம் சுவைக்க

உன்னை நினைத்த மனம்
இங்கு துண்டாக
உடைத்தாயே இரண்டாக
கண்ணே நீயே
உன்னை வியந்த விழிகள்
இங்கு தூங்காமல்
கண்ணீர் சிந்தவைத்தாயே
அழகே நீயே
உன்னை புகழ்ந்த நாவு
இங்கு அசையாமல்
மௌனம் சுவைக்க வைத்தாயே
சகியே நீயே
உன்னை புரிந்த இதயம்
இங்கு துடிக்காமல்
மரணம் நுழைய வைத்தாயே
கனியே நீயே