பெண் அது சாபம்

மரணத்தை தேடியே
நாங்கள் காத்திருக்கிறோம்
எங்களை படைத்தவனிடம்
சில கேள்விகளை கேட்க

பெண்
இது ஒரு புதுமையான சொல்
சோகத்திற்கே சொந்தமான சொல்
என்றும் தரித்திரம் நிறைந்த சொல்

என்னை படைத்தவன்
அவன் உயர்ந்தவன் என்று நினைத்தேன்
என்னை அழகாய் படைத்தால்
ஏதோ குறைந்துவிடும் என்று
என்னை அவனும் ஏமாற்றிவிட்டான்
அழகை தராமல்


என்னை விரும்பியவன்
உத்தமன் என நினைத்தேன்
ஆம் அவன் உத்தமன்தான்
என்னை உடலை முழுமையாக பார்க்கும்வரை
என்னை அனுபவித்தபின்
போய்விட்டான் எங்கோ காணாமல்

என் மடியில் பிறந்தவள்
சாபத்துக்கு மகளாக பிறந்துவிட்டால்
என்ன செய்ய அவளும் பெண்தானே
அதுதான் இங்கு மார்பு இருந்தும்
அதன் காம்புகள் மறுத்துவிட்டன பால் சுரக்க

ஏன் என்று தெரியுமா
என் நாவு தண்ணீர் கண்டு
பல நாட்களாய் விட்டன
என் பின் இருக்கும் இந்த தண்ணீர்தாங்கி போன்று

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (5-Sep-13, 5:31 pm)
பார்வை : 150

மேலே