உழைத்தவன் நீ ஜெயித்தவன் நான்

இப்போது வெற்றி பெற்ற
கர்வத்தோடு அலைகிறேன்
சிரிக்கிறேன்
வாழ்கிறேன்

அன்றொருநாள் இருந்தது
என் அறை இருண்டு
என் மனம் தனிமையில்
ஏதோ கதைகள் பேசி
என் வாழ்கை ஒற்றை வழிப்பாதையில்

பல்கலைகழக வாழ்கை
என்ன தெரியும் எனக்கு
ஏதோ குக்கிராமத்தில்
மாடு மேய்த்தவன் நான்
இறைபார்வையால் நானும் பல்கலைகழகம் கண்டேன்

நாகரிகம்
அது எனக்கு புதுமைதான்
ஆங்கிலம்
அது என்னை சுவரில் ஒட்டிய சாணியாய்
அதன் பக்கம் வராமல் ஓரமாய் தள்ளிவிட்டது

நான் எப்படி இங்கு ஜெயிக்க போகிறேன் ...?
தினம் தினம் ஒரே கேள்வி
என் மன அலையில் .....
நாகரிக ஆடை நடுவில்
என் வேட்டி சட்டை என்னை பிற ஒருவனாய் காட்ட

அந்த தருணம் ,அந்த நிமிடம்
என்னை நண்பனாய் நினைக்க ஒருத்தன்
பணம் இருந்தும் எளிமையாய்
அவனை பார்க்க எனக்கே புறாமை
பணம் இருந்தும் இப்படியும் வாழலாமா என்று .....
அவனை பார்த்து .....

என்னை ....
என் பயத்தை .....
என் கூச்சத்தை ....
போக்கியவன் ....
என்னையும் மனிதனாய் நினைத்தவன் அவன் ..

தமிழே அரைகுறையாய் இருந்த என்னில்
ஆங்கிலத்தை சரமாரியாக
பேசவைத்தவன் அவன் ..
வேட்டி சட்டையோடு அலைந்த என்னை
நாகரிக ஆடையில் நடனமாட வைத்தவன்

நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில்
என் நண்பனாய்
என் தாயாய்
என் தந்தையாய் எனக்கு தெரிந்தவன்
இப்போது எங்கே ....?

இப்போது நான் ஜெயித்து விட்டேன் நண்பா
நீ எங்கே ....?
உன் பிச்சை இது
உன் வாழ்கை இது
உன் மரண செய்தி கேட்டு நானும் அழுகிறேன்
திரும்பி நீ வந்துவிடு
அந்த பழைய நண்பர்களாய் மீண்டும் வாழ

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (8-Sep-13, 11:48 am)
பார்வை : 108

மேலே