தமிழ் அமுதே

முத்தமிழே என் முதல் தமிழே
என் வாழ்வின் கனி அமுதே
செந்தமிழே என் பைந்தமிழே
ஆல்கடல் தாண்டியும் ஆட்சி புரியும்
என் அழகிய தமிழ் அமுதே

மூவேந்தர் வளர்த்த முத் தமிழே
பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதே
தேவர் மூவரும் போற்றும் தமிழே
இமையம் தாண்டியும் இவ்வுலகம் ஆளும்
என் உயர் தமிழ் அமுதே

முச்சங்கம் வளர்த்த மூத்த தமிழே
மொழியின் சுவை சொல்லும் அமுதே
வையகம் போற்றும் வான் தமிழே
மொழிகளில் முதல் மொழி நீயே
என் இனிய தமிழ் அமுதே

எழுதியவர் : த.பார்த்தி (8-Sep-13, 9:17 pm)
சேர்த்தது : tha.parthi
Tanglish : thamizh amuthe
பார்வை : 477

மேலே