கொஞ்சம் வார்த்தை - மீதி மௌனம்
சூரியனை விரட்டிக்கொண்டிருக்கும் இருட்டின் வாயிலுக்கும் -
நிலவிற்கு காத்திருக்கும் மேகக் கூட்டங்களுக்கும் இடைப்பொழுதில் –
நானும் அவளும் அங்கு . . . !
காற்று இல்லாத அந்த இடத்தில் கண்ணீர்த்துளிகள் மட்டும் அவள் விழிகளில் -
கண்ணங்கள் வரை வழிந்த அந்த துளிகள் இதழ்களைத் தொடும் முன்பு
உறைந்து நின்றது . . . !
“காதலிக்கிறேன்” என்று சொல்லவில்லை . . . !
“காத்திருக்கிறேன்” என்றே சொன்னேன் . . . !
மௌனம் மட்டும் தந்தாள் . . . !
அவளின் மௌனங்கள் என் எண்ணங்களை எல்லாம் அடியோடு
வீழ்த்தத் தொடங்கிய தருணம் அவள் கை ரேகைகள் மட்டும் என்
கரங்களில் உணரச்செய்தது - அவள் அன்பை. . . !
இருகப் பிடித்த கரத்துடன் தோள்மீது விழுந்த அவளின் - மௌனம்,
கொஞ்சம் கொஞ்சமாக விலகி இதழருகில் புன்னகை மலர
சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் நடுங்கிவிட நான் மட்டும் உறைந்தே
போனேன் அவள் வெட்கத்தில். . . !
இமைகள் மூடியே அவள் சிரிக்க –
சிந்திய புன்னகையில் காற்றுகள் இசை மீட்ட -
அவள் வெட்கத்தின் முன் எந்தன் நினைவுகள் தடுமாறி உணர்ந்தது காதலை . . . !
என் முகம் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் அவளிடம் இல்லை – அவள் நிமிர்ந்து
பார்த்தாள் அவள் விழிகளில் வழியும் காதலை வைக்க என் மனதில்
இடமும் இல்லை . . . !
அன்று முதல் . . . !
அவளின் வெட்கத்திற்கு என் பார்வையை கடன் கேட்டு நிற்கும் அவள் அன்பின்
பின்னால் என் வாழ்க்கை . . . !