நேசம்

அக்காவுக்காக என்னவெல்லாம் செய்ய காத்துக்கொண்டு இருந்தான் மணி! அவள் ஊருக்கு வரும் போதெல்லாம் அத்தானையும் அக்காவையும் விட்டு பிரிய மாட்டான்...

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வான். மணிக்கு தம்பி இருந்தாலும் அக்காவின் மீது பாசம் அதிகம்... நண்பர்களிடம் நேரம் செலவழித்தை விட அக்காவிடம் தான் நேரம் செலவழித்தான்...

ஒருநாள்...

அக்கா திருவிழாவிற்க்காக ஊருக்கு வந்தாள்... மணி அவளை கண்டுகொள்ளவேயில்லை... போன்னும் பண்ணவில்லை...

அக்காவிற்கே ஆச்சரியமாக இருந்தது... என்ன தம்பி திடீரென்று மாறிவிட்டானே என்று கணவனிடம் புலம்புவாள்...

அம்மாவிடம் அப்பாவிடம் ஏன் இப்படி மாறிவிட்டான் என்று கேட்டுக் கொண்டே இருப்பாள்...

சிறு வயதிலே குடும்ப பொறுப்புகள் பார்ப்பதால் பாரம் தாங்காமல் இப்படி நடந்து கொள்கிறானோ என்று மனதில் நினைத்துக் கொள்வாள்...

அவள் அவனை நேரில் பார்த்து பேசினாலும் ஒழுங்காக பேசமாட்டான்... போனில் பேசினாலும் பேசமாட்டான்...

இந்த ஏக்கத்தோடே அவள் ஊருக்கு திரும்பிவிட்டாள்

ஒருநாள் செல்போனில் குறுஞ்செய்தி தம்பியிடம் இருந்து வந்தது. அதை பார்த்தவுடன் அவள் சந்தோஷப் பட்டு மணிக்கு போன் பண்ணினாள். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை...

இது போல நிறைய தடவை மணியிடம் குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது. அவளும் பேச முயற்சி செய்வாள்...
ஆனால் முயற்சி வீணாய் போனது..

அவள் அம்மாவிடம் மணியை பேச சொல்லுமா என்று தினமும் போனில் போராடுவாள்...

மணிக்கு ஒரு நாள் மெயிலில் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்! உன் நண்பர்களிடம் ஏன் நடந்துகொள்கிறாய் என்று கேட்கனும் என்று மனதில் நினைத்தை எல்லாம் கொட்டி எழுதி அனுப்பியிருந்தாள்...

அதை படித்துவிட்டு அவனும் அக்காவிற்கு மெயில் அனுப்பினான்... நான் ஒன்னும் அப்படியில்ல நீதான் பேசமாட்டேங்கிற என்று பதில் அனுப்பினான்...

என்னடா இப்படி நடந்து கொள்கிறானே என்று தினமும் மனதில் புலம்பிக் கொண்டேயிருந்தாள்...

மறுநாள் காலையில் மணிக்கு பிறந்தநாள் வந்தது. முதலில் அவனுக்கு நான் தான் போன் பேசனும் என்று எண்ணி வாழ்த்துக்கள் சொன்னாள்... அவனும் ம்... என்று சொல்லி போனை வைத்துவிட்டான்...

சரி இனிமேலும் நாம் பேசக்கூடாது என்று அக்காவும் முடிவெடுத்தாள்...

5நாட்கள் கழித்து அக்காவிற்கும் பிறந்தநாள் வந்தது.. பிறந்தநாள் முதல்நாள் அத்தானிடம் போன் பண்ணி அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்விடுங்கள் அத்தான் என்று மணி சொன்னான்...

அதற்கு அவர் வாழ்த்துக்கள் சொன்னால் நீங்கள் சொல்லுங்கள் இல்லை விடுங்கள் பரவாயில்லை என்று பேசிவிட்டார்...

அக்காவின் பிறந்தநாளும் வந்தது... அவளுடைய செல்போனிற்கு முதல் மணியோசை மணியிடமிருந்து வந்தது...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா... பல்லாண்டு காலம் நீ நீடுழி வாழனும் அக்கா என்று வாழ்த்தினான்... அக்கா மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்துக்கொண்டே இருந்தாள்...

ஏன்டா என்னிடம் பேசாம இருந்த... எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது என்று எப்படி உனக்கு புரியவைப்பது என்று மணியிடம் புலம்பினாள்.

அதற்கு மணி, " சும்மா தான் அக்கா உன்னிடம் விளையாடினேன் என்று சொல்லி சிரித்தான்".

அக்கா விளையாட்டுக்கூட இப்படி செய்யாதடா... என் உயிரே போய் விடும் போல இருந்ததடா....

சரி அக்கா அதை விடுங்க... பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் அக்கா...

நீ பேசியதை விடவா வேறொரு பரிசு இந்த உலகத்தில் இருக்கமுடியும் என்று ஆனந்த கண்ணீர் வடித்துக்கொண்டே அக்கா சொன்னாள்.

நன்றி ;ரதிதேவி
நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (11-Sep-13, 11:09 am)
Tanglish : nesam
பார்வை : 201

மேலே