நீ காற்று நான் மரம்...

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
கிடைக்கப் போவது பெருந்தொகை சீதனமென்பதால்!

சீதனம் வாங்கா சீர் திருத்தவாதி.
மார்தட்டிக் கொண்டவன் கட்டியிருந்தான்
மாணிக்க வியாபாரியின் ஒரே மகளை!

அக்னி பொழியும் அனல்காலம்.
அடை மழையில் நனைந்திருந்தான் அவன்.,
சூடு பிடித்துவிட்டது குளிர்பான வியாபாரம்!

மௌன விரதத்தில் அவன்.,
எதிரே வந்தால் சண்டாளி.,
பேசவைத்துவிட்டாள் கண்களால்!

பலூன் ஊதிக் கொண்டிருந்தது குழந்தை.
வெடித்துப் போனது இதயம்.,
அம்மாவாய் பழைய காதலி!

வாசலில் முழுநேர பாதுகாப்பு.
உத்தரவாதமுள்ள பராமரிப்பு,.
சில்லரையால் சீராகும் பொது மலசலக்கூடம்!

எழுதியவர் : meiyan nadaraj ilankai (12-Sep-13, 2:52 am)
பார்வை : 144

மேலே