மனமே கலங்காதே
ஏ ! மனமே
கலங்காதே !
நேற்று ,இன்று ,நாளை
என்பதை நினைத்து
மனமே கலங்காதே !
நேற்று என்பது முடிந்து விட்டது
நேற்று நடந்ததையே
நினைத்து நினைத்து
கலங்காதே !
நேற்று நடந்ததை மாற்ற
உன்னால் முடியுமா
அல்லது
என்னால் முடியுமா
எவராலும் மாற்ற முடியாத
ஒன்று .நேற்று !
எனவே
மனமே கலங்காதே !
நாளை என்பது
இன்னும் வரவில்லை.
வராத ஒன்றை
நினைத்து நினைத்து
கலங்காதே !
நாளை என்பது மாயை
நாளை என்பது நிலையானது
ஆனால்
அது வாழும் உயிர்க்கு
கேள்வி குறியானது !
எவராலும்
எதிர்பார்க்க முடியாத
ஒன்று .நாளை !
எனவே ,
மனமே கலங்காதே !
இன்று என்பது
நடந்து கொண்டிருக்கிறது .
நடப்பது என்பது
நன்றாகவே
நடந்துக் கொண்டிருக்கிறது !
நடப்பது நடந்தே தீரும்.
இன்று என்பதே
நிலையானது !
எனவே
இன்று என்பதை நினைத்து
மனமே கலங்காதே !!!