எந்தன் வாழ்க்கை பாடம்
அந்தி மாலை பொழுதினிலே
ஆகாய சூரியன் மறைகையிலே
அள்ளாத வெயிலின் கொடுமையை
அலைகள் தன்னில் அமர்ந்து
அலுப்பை போக்க
அற்புதமான கடற்கரையிலே
உலவி கொண்டிருதவேளையிலே
அந்தனை கூட்டம் தன்னில்
அழகிய வெள்ளி சிலையொன்று
உன்னிப்பாக என்னை கயல் விழிகளால்
கண்ணிமைத்து அழைத்தது என்னை
அருகில் செல்ல ஆவலேனினும்
அச்சம் பிற மொழிதனில் -விரும்பாமல்
மெதுவாக நின்றேன்
காலம் செல்ல அருகில் வந்த அந்த
கன்னியவள் கணீர் என்று ஒற்றை சொல்லன்று
கேட்க அதிர்த்து எந்தன் உடல்
கேட்டவள் பின்னர் எந்தன் சம்மதம் கிடைத்தபின்னே காட்டிய கார்தன்னில்
சம்மதமாய் அருகில் அமர்ந்து
எவ்விடம் செல்ல என என்னிடம் வினவி
வேறிடம் எதுவும் வேண்டாம் எந்தன் இடம்
போவம் என்று காட்டிய வழிதன்னே
காரினில் செல்ல கண்டோம்
காரிருள் பொழுதன் கவ்விய கரையில்
கால் மணிநேர பயணதின்பினே
கூட்டமாய் பெரு வீட்டின் நடுவில்
சிறிதொரு வீட்டில் நின்றேன்
அழைத்தவள் அருகில் இருக்க
அமைதியை உருவில்கொண்டு
அச்சத்தை அரவேதள்ளி
ஆமையாக உள்ளே சென்றேன்
சென்றவன் நான் இருக்க அழைத்தவள் அருகிருக்க
பக்கத்துக்கு அறை தன்னே சிறுகுரல் கேட்க்க கண்டேன்
கேட்டது எவர் குரல் என தெரிந்த சிங்களத்தில்
செப்பிய எந்தன் கேள்வியை புரிந்த கன்னி
செவ்விதழ் வாய் திறந்து தன் மகள் என்றுரைய
சொக்கியே என்னை மறந்தேன்
திக்கிட்டு நின்றென்னை கண்களால் கனிய
திமிராக சொன்னேன் ஏன் உனக்கு இந்த பொழப்பு
சட்டென்று சிவந்த முகம்தன்னில்
சிரிபோலிந்த கண்ணீருடன்
தன் வலியை தடுதுரைதால்
போற்றிய போர் தன்னே
பொழிவிழந்த தன் வாழ்வை
போருக்கு போன தன் தலைவன்
போனவிடம் தெரியாதை
விட்டுப்போன பிள்ளை வளர்க்க
வழி தெரியாமல் என் இருபத்தைந்து வயதினின்
இரவினை அனுபவிப்பதை ஒவ்வொரு நாளும்
ஒவொரு துணைவன் அவனிடும் பணமோ
எந்தன் மகளின் உணவு
எண்ணத்தை துறந்தபின்னே
பணம் என்ன பொருள் என்ன
கையினில் இருந்த பத்து மயிலை (பத்தாயிரம் )
பத்திரமாய் கையளிதபின்னே
வேண்டிய வேலை ஒன்றை உனக்கே
நான் தருகின்றேன் என்றுரைத்து
அவள் தெரிந்த தையலிலே
அவளுக்காய் ஒரு தொழிலமைத்து
கட்டுடனே வாழ வழிசமைதேன்