அகதி அதோகதி

எத்தனை காலம் இந்த வாழ்கை
எங்கள் சொந்த இடங்களிலே
ஒரு கூடாரத்தில் ஒரு ஓரமாய்
அகதிகள் என்ற அந்தஸ்தோடு ...

ஏக்கர் கணக்கில் வயல் செய்து
மூட்டை கணக்கில் நெல் குத்தி
மூன்று வேளையும் மூக்குபிடிக்க
சாப்பிட்ட நாங்கள் .......
ஒரு வேளை சோற்றுக்கு
ஒரு மைல் தூரம் வரிசையில் இன்று நாங்கள்


ஒரு டம்ளர் தண்ணீருக்கும்
கூச்சமில்லாமல் கையேந்துகிறோம்
உப்பு தண்ணீராக இருந்தாலும் சரி
சேற்று தண்ணீராக இருந்தாலும் சரி
தாகத்திற்கு என்ன
அது உப்பு தண்ணீர் என்று தெரியுமா....
சேற்று தண்ணீர் என்று தெரியுமா .....

மழையில் ஒரு துளி தண்ணீர்
கூரை வழி விழுந்தாலும்
மறுநாளே மறுஓடு மாற்றிய நாங்கள்
முழுமழையும் கூடாரத்தினுள் விழுந்தாலும்
விடியும் வரை கண்திறக்காமல் தூங்குகிறோம்
என்ன செய்ய
இதுதான் தலைவிதி என்று

இன்னும் காத்துக்கொண்டிருக்கிறோம்
விடியும் பொழுது எங்களுக்காய்
விடிவது எப்போது என்று
ஏனெனில் நாங்கள் இன்னும் நம்புகிறோம்
இறைவன் இருக்கிறான் என்று

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (16-Sep-13, 4:51 pm)
பார்வை : 55

மேலே