ஞஃகான் கவி

அஞ்சனப்பெட்டியின் அஞ்சனத்தால்
அஞ்சனமிட்டாள் மஞ்சளிட்ட
காஞ்சனமேனியிலே

அவஞ்சனம் உரைஞ்ச
பஞ்சபாணனுமாகவோ புளிஞராகவோ
இம்மஞ்சுளம் மஞ்ஞை
ஒஞ்சிம்வரை வாஞ்சனையாய்
ஞயம்பட கொஞ்சுவாளோ
ஞலவல்களால் செஞ்ச முழைஞ்சுயிலமர்ந்து
தஞ்ஞனமுடன் தழிஞ்சி செஞ்செவே
செஞ்செழிப்புடன் வாஞ்சிப்பாளோ

=== க.பிரபு தமிழன்

(இக்கவியிற்கு நான் கற்பனைச்செய்த சூழ்நிலையாவது – தன் தோழி ஒப்பனையிடுவதைப் பார்த்து கேளிக்கையாய் கவிபாடும் தோழியின் பாடலே இக்கவியாகும்)

விளக்கம் :

மை வைக்கும்பெட்டியின் மையை எடுத்து
மையிட்டாள் மஞ்சளிட்ட
பொன் மேனியிலே
அம்-மை கலைய/அகல/அழிய
காமனாகவோ (அல்லது) வேடராகவோ (வந்தவரின் அழகில் மதிமயங்கிய)
இவ் அழகு மயில்
வெட்கப்படும் வரை ஆசையாய்
ஞயம்பட கொஞ்சிப்பேசுவாளோ அல்லது
மின் மினிபூச்சிகளால் நிறைந்த மலையின் உட்குகையில் அமர்ந்து
தன்னையறிந்தவனுடன் (அவள் காதலனுடன்) சாய்ந்தார் மேற்படராமை நேராக
முகமலர்ச்சியுடன் காதல் பாடம் மொழிவாளோ
=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (16-Sep-13, 6:27 pm)
பார்வை : 70

மேலே