மரம்

சாலையோரங்களில்
கனரக
வாகனங்கள் விடும்
புகையை - எங்களுக்காய்
போர்த்திக்கொண்டாய் !

உன் பச்சையமே பழுப்பு
நிறமானது எங்களால் . . .!

உன்னையே அடையாளமாய்
கொண்டு - நிற்கும்
பேருந்து தடங்கள்
எத்தனை! எத்தனை!!

எத்தனை ஊர்களுக்கு
நீயே - நீதிமன்றம் ஆனாய் !!

எங்கள் செம்மொழியில்
உனக்கோ வீரம் [மற(ர)ம்]
என்று பெயர் !

உன் சமூகத்தை
ஒவ்வொன்றாக வெட்டும்
போது - எங்கள்
வாழ்நாளில் ஓர் நாளை
கண்களுக்கு தெரியாமல்
களவாடுகின்றோம் என்பதை
ஏன்?
அறியாமல் போனோம் !!!

எழுதியவர் : Iniyainiyan (16-Sep-13, 6:30 pm)
சேர்த்தது : iniyainiyan
பார்வை : 42

மேலே