என்னவனே
எத்தனை நாட்கள் தான்
நான் உன் நினைவுகளால் வாழ்வது
இன்று நான் உன்னுடன்
இருந்துவிடகூடாதா என்கிறது மனம்
இருக்காதே என்கிறது
உலகச்சடங்குகள்
எப்படி உன்னை நான்
ஏற்றுக்கொண்டேன் எனபது
இன்றும் எனக்கு ஒரு கேள்வி குறி தான்
என்ன செய்ய
இமை மூடினாலும்
நீ தான் இருக்கிறாய்
என் மனதில், கண்களில், நினைவுகளில்

