என்னைச்சுற்றி ஒரு பயணம் !

என்னைச்சுற்றி ஒரு பயணம் !

மனித நேயம்
சிரசு கிரீடம் ! - இன்று
பாதமிதியடி !

பாசம்
வேஷம்
இணைந்த உலா வீதியில் !!

அன்பு
அளவீடுகளால் ...
எடையிழப்பு !!

கருணை
காணாமல் போனது
காட்சி பொருளாகவும் !!


ஞானம்
ஆடை அடையாளம் !
மானம்
தன்மானம்
தலைகீழாய் !!

மரணம் சுமக்கும்
மனிதன் காலடியிலும்
காத்து கிடக்கும் மரணம் !
அறியாமலே
அதிகார நடை !!

" நன்றி "
நல்ல சொல் !
சொல்ல மறந்தோம் !
பண்பாடு
புதையுண்ட நகரங்களாக .....!

நாம்
அறிவில் குழந்தை !
அறியாமையில் வளர்ச்சி !!

மனித நேயம்
சிரசு கிரீடம் !!
இன்று ..........!
நாளை ..........!
என்று ????


நட்பில் nashe

எழுதியவர் : nashe (25-Sep-13, 12:46 pm)
பார்வை : 56

மேலே