எது கடவுள் (!?)

#அழும் குழந்தைக்கு அன்னை ..........!
#ஆரா பசிக்கு அன்னம் .....!
#இலைக்கு மரம் ....!
#ஈசலுக்கு மழை ......
#உடம்பிற்கு உயிர் !.
#ஊமைக்கு பேச்சு ....!
#எளிமைக்கு நேர்மை.....!
#ஏவலுக்கு விடுதலை .....!
#ஐந்திரிபுக்கு மெய்ப்பொருள் .....!.
#ஒட்டாரத்திற்கு அடக்கம் ....!
#ஓதலுக்கு பட்டம்......!
#ஔடதம்க்கு அளவே கடவுள் ......

ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு கடவுள் ......

உழைக்கும் ஏழைக்கு
பணம் ,

நடுத்தர வர்க்கத்திற்கு
அயல் நாட்டு வேலை

பணக்கார பங்காளிக்கு
மருந்தில்லா தூக்கம்

ஐந்து வயது குழந்தைக்கு
அம்மா அப்பா

இருபத்தைந்து வாலிபத்திற்கு
வசதி வாய்ப்பு

அறுபது வயது ஏக்கத்திற்கு
பேரன் பேத்தின் அன்புகலந்த அக்கறை

கீழே விழுபவனுக்கு
அதிஷ்டம் கடவுள் ...
விழுந்து எழுபவனுக்கு
நம்பிக்கையே கடவுள் ...

கொடுப்பது கடவுளா (?)கொடுத்துக்கொண்டே
இருப்பது கடவுளா (?)
நமக்கும் மீறிய
நாம் பற்றுவது கடவுளா ,
இல்லை
நம் தேவை தான் கடவுளா ?


எது கடவுள் ?
எங்கே கடவுள் ?
யார் கடவுள் ?
நீ கடவுள் ...
நான் கடவுள் ..
நமக்குள் தானே கடவுள் ....!

எது வாகினும்,
உண்மை யாதெனில் .....
இறுகிய மனதிற்குள்
கடந்து உள்புகும் சுயநலமற்ற
"மனிதத்துவமே கடவுள்"!

(நன்றிகள் பற்பல என் அகன் ஐயாவிற்கு )

எழுதியவர் : yathvika (27-Sep-13, 2:25 am)
பார்வை : 668

மேலே