இயற்கையோடு நான் வேண்டும்

அத்தனை மொழிகளிலும்
ஒவ்வோர் சொல்லெடுத்து
புதியதோர் பாஷை
உருவாக்க வேண்டும்...

விடியாத வானம், முடியாத கனவு
என் இரவுகளின் நீட்சி
தொடர்ந்திட வேண்டும்...

ஒரு கண்ணும் காணாத‌
உயிரெல்லாம் ஒரு சேர்த்து
அங்கெந்தன் தனிமையுடன்
உறவாடி வர வேண்டும்...

நிலவென்ன, கடலென்ன,
போகாத இடமெங்கும்
போய் ஆடி வர வேண்டும்...

இடம் யாவும் இசையாக‌
இதழோரம் அமுதோட‌
பூ கோர்த்து மடி செய்து
வண்டாகும் வரம் வேண்டும்...

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (29-Sep-13, 11:42 am)
பார்வை : 89

மேலே