எங்கள் காதலும் பலமானது!

மார்கழி மாலை நேரம்!
பூங்காவின் ஓரம் மரத்தடியில்
நானும் அவளும் உற்சாகமாய்ப்
பேசிக் கொண்டிருந்தோம்!

நாங்கள் இளம் சிட்டுக்கள்
இன்னும் முதிர்ச்சி அடையவில்லை..
என்று ஏளனமாய் எங்களைப்
பார்த்து நிலவு பரிகசித்தது!

தாரகைகளுக்கு மத்தியில்
தகதகவென நாங்களும் புத்தம் புதிதாய்
நிதமும் வந்து அங்கு மின்னினோம்
நிலவும் வெட்கித் தலை குனிந்தது!

எங்கள் காதலும் பலமானது
என அறிந்து இன்று வானில்
நிலவும் ஒளிர்கிறது – நாங்கள்
இணைபிரியாக் காதலர்கள்!

தை பிறந்தது!
வழியும் பிறந்தது!
பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது,
இனிது எங்கள் திருமணம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-13, 8:57 am)
பார்வை : 1374

மேலே