கண்ணீரின் சரிதை

இவர்கள் அருகில் இருந்தால்
கல்லறையிலும் தொந்தரவு தான் !

பிளாஸ்டிக் பூக்களையும்
கண்ணீர் விடவைப்பார்கள் !

கண்ணீர்ப் புகைக் குண்டை
உணவாய் உட்கொள்ளும்
இவைகளுக்கு எங்கு புரியும் என் மனம் !

கண்ணீருக்கே காண்பிக்கும் இவர்கள்
உயிரினத்தின் கண்ணீரா விளங்கப் போகிறது !

நம்பிக்கை துரோகத்திற்கு தலைமகளாகிய
இவர்கள்
நம்பிக்கை பற்றி பேச தகுதியற்றவர்கள்!

ஆணின் மனத்தவிப்புகளை
தன் காலணி
என்று நினைக்கும் இவர்கள்
மண்ணிற்கு பாரமாய் இருப்பவர்கள் தானே !

காகிதக் கப்பல் மழைநீரில்
பங்களிக்கும் பொது
கல்லை வீசும் இவர்களுக்கா
தெரியும் குழந்தையின் உள்ளம் பற்றி !

பதுங்குக்குழி கண்ணி வெடிகள்
எந்நேரமும் ஆபத்து தான் !

நம் சோகம் என்னவோ
அவர்களுக்கு சர்க்கரை துவையல் போல
துயரம் நமக்கு !
மகிழ்ச்சி அவர்களுக்கு !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (3-Oct-13, 6:49 pm)
Tanglish : kaneerin sarithaai
பார்வை : 179

மேலே