பிரிவின் பேச்சு

உன்னை பிரிந்து இருந்தேன்
சிலகாலம்
கவிதை எழுத முயலுகிறேன்
கவிதையே என் மனதில் எழ மறுக்கிறது !

வெளிச்சப் பகலும் நடுநிசியை தெரிகிறது
கண்ணீரோ இனிக்கிறது கடல் நீரும் கூட!

என் மனமோ
பாறைமேல் விழுந்த மழைத்துளியாய் மாறியது !

என் கண்களோ தொடுவானத்திற்கு
துணையாய் செல்கிறது !

முழு இரவிற்கு நண்பனாய் மாறி
அவனுடன் நேரத்தை செலவழிக்கிறேன் !

தரையில் விழுந்த மீனாய்
உயிருக்கு போராடுகிறேன் !

தரை ஏறிய முதலை போல
வலிமை அற்றவனாய் உள்ளேன் !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (3-Oct-13, 7:51 pm)
Tanglish : pirivin pechu
பார்வை : 96

மேலே