தேனி மெட்டு

மலைமுகடில் தவழும் மேகங்களே
அருகில் வந்து என்
மனவிளிம்பில் எழும் ராகங்களை கேளுங்களேன் .

மலைச்சரிவில் ஆர்பரிக்கும் அருவிகளே
மெல்ல நின்று என்
கனவுலகில் குளிர் சாரல்களை தூவுங்களேன் .

அலைகளோடு அலைபாயும் சருகுகளே
கொஞ்சம் நின்று என்
கவிதைக்கு சந்தங்களாகி சுதி மீட்டுங்களேன்

மலர்களோடு மையல் கொண்டாடும் வண்டுகளே
சற்று நேரம் விலகி என்
இசையொடு சேர்ந்து ரீங்காரம் பாடுங்களேன் .

பச்சை பட்டாடை விரிக்கும் புல்வெளிகளே
இனிதாய் தாகம் தீர என்
பருகும் நீராய் பனித்துளியை தாருங்களேன்

இயற்கை அன்னையின் குளிர் மடிநிழல்களே
இனிதாய் இளைப்பாற என்
சுவாசத்தில் உற்சாகம் ஒருகோடி சேருங்களேன்

எழுதியவர் : கார்முகில் (3-Oct-13, 8:48 pm)
பார்வை : 287

மேலே