தமிழ் அகராதி

அகண்டிதம் - கூறுபடாதது : முழுமை : கண்டிப்பில்லாதது.
அகதங்காரன் - மருத்துவன்.
அகதம் - குளிகை : சுகம் : அழிவற்றது.
அகதன் - நோயிலி.
அகதி - போக்கற்றவர் : கதியிலி : கல்லை மரம் - வேலமரம்.


அகதேசி - உள்ளூர்க்காரன்.
அகத்தடிமை - அணுக்கத் தொண்டு.
அகத்தடியள் - வீட்டு வேலைக்காரி.
அகத்தன் - இடத்தினன் : தலைவனல்லாதவன் : எல்லாவற்றையும் மனத்தில் வைத்திருப்பவன்.
அகத்தார் - உள்ளிடத்திலிருப்பவர் : இல்வாழ்வார் : உறவினர் : முற்றப்பட்டார் : நொச்சியார்.

அகத்தி - சாழையகத்தி : சிற்றகத்தி : செவ்வகத்தி என்ற மரவகை.
அகத்திணை - உள்ளத்தே நிகழ்கின்ற இன்பவொழுக்கம்.
அகத்திணைப்புறம் - கைக்கிளையும் : பெருந்திணையும்.
அகத்தியம் - கட்டாயம் : அவசியம் : ஓர் இலக்கண நூல்.
அகத்தியல் - உள்ளத்தியற்கை.

அகத்திருத்துவம் - செயலின்றி நிற்கும் கடவுட்டன்மை.
அகத்தீடு - கையால் உள்ளணைக்கை : உள்ளீடு : உள்ளிடுதல் : கழுவுதல் : நிறைவு : அன்பு : எண்ணம்.
அகத்து - நடுவண்.
அகத்துழிஞை - கோட்டையிலுள்ளாரைப் புறத்தார் போர் வெல்லும் புறந்துறை.
அகத்தொண்டர் - வீட்டுப் பணியாளர்.

நன்றி நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:37 am)
பார்வை : 205

மேலே