தமிழ் அகராதி

அகமகிழ்ச்சி - உளக்களிப்பு.
அகமணை - அகமணைத் தட்டு : வண்டியினுட் பலகை : படகின் உட் கட்டை.
அகமதி - ஆணவம்.
அகமம் - மரம் : மலை.
அகமருடணம் - வேதமந்திர விசேடம் : நீருக்குள்ளே நின்று செபித்துப் பாவத்தைப் போக்கச் செய்யும் ஒரு மந்திர செபம்.


அகமாட்சி - இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள்.
அகமார்க்கம் - முக்குணம் பற்றிவரும் மெய்க் கூத்து : அருமையிற் பாடல் : மந்திர முறை.
அகமிசைக்கிவர்தல் - புரிசைகளின் (மதில்) மேல் ஏறி நின்று போர் புரிதல்.
அகமுகம் - உண்முகம் : அந்தர்முகம்.
அகமுடையாள் - வீட்டுக்குடையவள் : மனைவி.


அகமுணல் - தெளிதல் : மனதிற் கொள்ளல்.
அகம்படி - அகத்தொண்டு : உள்ளிடம் : மனம் : ஒரு குலம் : அடிவயிறு.
அகம்பன் - அசைவற்றவன்.
அகம்பாவம் - உண்ணினைவு : செருக்கு : ஆணவம்.
அகம் - உள் : மார்பு : மனம் : ஞானம் : பாவம் : வீடு : நிலம் : மருதம் : மலை : அகக்கூத்து : அகங்காரம் : ஒருநூல் :
இருப்பிடம் : உடல் : உயிர் : விண் : ஆழம் : ஆன்மா : ஒருமரம் : துக்கம் : நாள் : பள்ளம் : பாம்பு : தீவினை : குணாகுணம்.


நன்றி நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:47 am)
பார்வை : 223

சிறந்த கட்டுரைகள்

மேலே