தமிழ் அகராதி

அகவிலை - உள்ளிதழ் : தானியவிலை.
அகவுதல் - ஒலித்தல் : பாடுதல் : அழைத்தல் : ஆடல்.
அகவுநர் - ஆடுவோர் : பாடுவோர்.
அகவுவம் - பாடுவோம்.
அகழான் - ஒருவகைப் பேரெலி : வயலெலி.

அகழி - அகழ் : கோட்டை : மதில் சூழ் கிடங்கு : குழி : தோண்டப்பட்டது.
அகழ் - அகழி : குளம் : கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு : அகழென்னேவல்.
அகழ்தல் - தோண்டுதல் : கல்லுதல் : உழுதல்.
அகளங்கம் - குற்றமின்மை : சீதாங்க பாஷாணம்.
அகளம் - களங்கமின்மை : யாழின் பத்தர் : தாழி : நீர்ச்சால்.

அகற்சி - அகலம்.
அகற்பன் - ஒப்பில்லாதவன்.
அகற்ப விபூதி - இயற்கையில் உண்டான விபூதி.
அகற்றம் - அகலம் : பிரிவு : பரப்பு.
அகன்பணை - அகன்ற மருத நிலம்.

அகன்மணி - தெய்வமணி : அகன்ற மணி : உயர்ந்த மணி : உயர்ந்த முத்து.
அகன்றில் - ஆண் அன்றில் : ஆண் கவுஞ்சம்.
அகனைந்திணை - குறிஞ்சி : முல்லை முதலிய ஐந்திணை.
அகன்றிசைப்பு - யாப்பு முறையில் அகன்று காட்டுங் குற்றம்.
அகன்னம் - செவிடு : காதற்றது.


நன்றி ;நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:54 am)
பார்வை : 295

சிறந்த கட்டுரைகள்

மேலே