தமிழ் அகராதி

அகாடி - குதிரை முன்னங்காற்கயிறு : முள்.
அகாதம் - பள்ளம் : நீந்துபுனல் : மிகுதி : தேவகணத்தால் வெட்டப்பட்ட குளம் : வஞ்சகம் : தொலைவு : ஆழம்.
அகாரம் - ஓர் எழுத்து : வீடு.
அகாமவினை - அபுத்திபூர்வமான செயல்.
அகாலம் - காலமல்லாத காலம் : பஞ்ச காலம் : தகுதியற்ற சமயம்.அகிஞ்சனன் - வறிஞன் : உலுத்தன்.
அகிதம் - தீமை : இடையூறு : தகாதது.
அகிதலம் - பாதாளம்.
அகிம்சை - கொல்லாமை.
அகி - பாம்பு : ஆவணி : இரும்பு : ஒரு மரம் : கதிரவன் : பகைவன் : முகில் : இராகு : ஈயம் : ஒரு விண்மீன் : வஞ்சகன் : வச்சிரப்படை : விருத்திராசுரன்.அகிலம் - எல்லாம் : அனைத்து : பூமி : நிலவுலகம்.
அகில் - ஒரு மரம் : மணப்பொருள் வகை : அகரு.
அகிற்கூட்டு - ஏலம், கருப்பூரம், எரிகாசு, சந்தனம், தேன் என்னும் ஐந்தின் கூட்டு.
அகுசலவேதனை - துக்க உணர்ச்சி.
அகுடம் - கடுகு ரோகினிப்பூண்டு.

அகுட்டம் - மிளகு.
அகுதார் - உரிமையாளி.
அகுதி - கதியிலி : அகதி.
அகுதை - ஓர் ஈகையாளன்.
அகுரு - வெட்டிவேர் : அகில்மரம் : இலகுவானது : ஈனமில்லாதது : குரு வல்லாதவன்.

நன்றி ;நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:57 am)
பார்வை : 102

மேலே