"என் அன்பின் மறுபிறவியால்"

அன்னை தந்த அன்பு சொல்ல
ஆருயிரே நீ ஆதவனாய் என் வாழ்க்கையில் வர
நானும் வசந்தமென்னும் பொருளடைந்து
இரவு பகல் மறந்து
நெகிழ்ந்து நின்ற நேரம்,
நம் வாழ்வுக்கு அர்த்தமாய் அமுதமொன்று
இறைவன் அளிக்க,
பறந்து நின்ற என் நெஞ்சத்தின்
இறகுடைத்து இருளுக்கு செலுத்தி
இருளாகி விட்டாய் நீயும்...
கண் கொண்ட இந்த குருடனின்
காட்சிக்கு வந்ததோ,
'தூக்குகயிறு'...
அதை தூக்கி எடுத்து துக்கத்தை நிறுத்த
நான் கிளம்ப,
"தூக்கிகொள் அப்பா" என்றாள்
இறைவன் அளித்த என் அமுதம் !!!!!
அர்த்தமொன்று சொல்ல என் வாழ்க்கை இல்லை
என்ற எனக்கு வாழ்க்கையே அர்த்தமானது
"என் அன்பின் மறுபிறவியால்"...

எழுதியவர் : மௌன இசை (8-Oct-13, 3:16 pm)
பார்வை : 67

மேலே