வணக்கம் தோழர்களே..! பொள்ளாச்சி அபி

வணக்கம் தோழர்களே..!
வரும் அக்டோபர்-20.ஆம் தேதியன்று காலை பத்து மணியளவில்,பொள்ளாச்சி- மத்தியப் பேருந்து நிலையம் அருகில், பாலக்காடு சாலையிலுள்ள, நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்,பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பில்,இலக்கிய அமர்வு நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு நிகழ்ச்சியாக மீண்டும் அகரம் காலாண்டிதழின் அறிமுகத்தைத் தொடர்ந்து, இதழின் நிறுவனரும், நமது தோழருமான அகன் எனும் அமிர்த கணேசன்,இதழின் ஆசிரியரும், திறனாய்வாளருமான திரு.க.பஞ்சாங்கம்,இணை ஆசிரியர் திரு.புதுவை சீனு.தமிழ்மணி,மற்றும் பிரபல எழுத்தாளரும்,கவிஞருமான திரு.பா.ரவிக்குமார் ஆகியோர் ஏற்புரையும்,சிறப்புரையும் நல்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கவிஞர் ந.முத்து கலந்து கொள்கிறார்.
சங்க இலக்கியம் குறித்த சிறப்புப் பார்வை தலைப்பில்,பேராசிரியர் ச.முத்துவேல்,
“வைகறை” இலக்கிய இதழும்,அனுபவங்களும் தலைப்பில் கவிஞர் வைகறை இராமகிருஷ்ணன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் படைப்பாளர்களாகிய நீங்களும் கலந்து கொண்டு,சிறப்பிக்கும் படி,இந்த அழைப்பின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் உங்கள் நண்பர்களிடமும் இத் தகவலை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.
வாருங்கள் தோழர்களே ..! வாய்ப்பு இருப்பவர்கள் எல்லாம் சந்திப்போம்..! வாழ்வை மகிழ்வாக்க சிந்திப்போம்..!
உங்கள் வரவை எதிர்பார்த்தபடி,அன்புடன் பொள்ளாச்சி அபி.
மேல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள எனது முகப்பு பக்கத்திலுள்ள-கைபேசி எண்ணுக்கு அழைக்கலாம்.-9894602948-