இரவல் மனங்களைப் பெற்றிடுவீர்

இரக்கமே அறியாத அரக்க மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
ஈகையின் அர்த்தம் புரியா மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
அன்பின் ஆழம் அறிந்திடா மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
நட்பின் பெருமையை உணரா மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
உண்மையை போற்றிடா மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
தமிழின் தொன்மை அறியா மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
ஒற்றுமையின் உயர்வை அறியா மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
சலனங்கள் முற்றும் நிறைந்த மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
சாதிமத வெறியில் மூழ்கிடும் மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
காதலெனும் அன்பை புரியா மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
ஏழைகளை எள்ளி நகையாடும் மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
உதவிடும் உள்ளம் இல்லாத மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
போட்டி பொறாமை வழிந்திடும் மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
அகமும் புறமும் மாறுபடும் மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
பண்பாடே அறிந்திடா பரந்த மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
புறம்பேசியே புண்ணான புனித மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
பாராட்ட மனமில்லா பண்படா மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
பழுதான பாதையில் பயணிக்கும் மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
வாழ்த்திட மனமில்லா வறண்ட மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
மனமே இல்லாத மாண்புமிகு மனங்களே
இரவல் மனங்களைப் பெற்றிடுவீர் !
பழனி குமார்