வலிகளுக்கு மட்டும் தெரிந்த கல்வெட்டுக்கள்

சாதிக்கப் பிறந்தவனை,
சாதிக்குப் பிறந்தவனாய்,
சல்லடைக்குள் வீசி விட்டு,
சரித்திரத்தை பாடினார்கள்...

திறனாளி என்போனை,
இனம் என்ன? கேட்டுவிட்டு,
சோதிக்க ஒன்னாமல்,
தட்டிவிடப் பார்க்கிறார்கள்...

பட்டறைக் குடும்பத்தில்,
பட்டங்கள் பெற்றோனை,
பார்த்தடித்த பாவியவன்,
என்றெண்ணி ஏசினார்கள்...

திறமைக்குப் போட்டி வைத்து,
பணத்திற்குப் பரிசளிப்பர்...
அறிவுக்குச் சோதனையில்,
அயலவனை ஆதரிப்பர்....

வேட்கைகள் எல்லாம்,
வேந்தனுக்கு மட்டுமோ???
வெற்றியும் கூட,
ஜாதி மதம் பார்க்குமோ???

பூமிக்குள்ளே வேற்றுமையாம்,
இரண்டாம் உலகம் தேடுகிறார்கள்...
ரோபோக்களின் சாதனையால்,
பல குடும்பம் அழுகிறார்கள்...

வளர்ந்தவன் மேலும் வளர்கிறான்,
வீழ்ந்தவன் மேலும் வீழ்கிறான்...
அத்தனைக்கும் தீர்வென்றால்,
அடுத்து ஒன்றைக் கூறுகிறேன்...

ஜாதி மதம் பார்க்காதே...
திறமையைப் பாரு!!!
அதிர்ஷ்டத்தை நம்பாதே...
அறிவை நம்பு!!!

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (15-Oct-13, 9:02 am)
பார்வை : 86

மேலே