குறை கழிந்து நிறை அறிந்து

குறை காண்கிறோம்
எதிலும் எப்போதும்
நிறையே இல்லையா
என்று நினைக்கையில்
ஆயிரம் ஆயிரம்
அலைகள் முன் நிற்கின்றன
கறுப்பு என்றால் வெறுப்பு
குட்டை என்றால் கடுப்பு
குண்டு என்றால் கேலிக்கிடம்
ஒல்லி என்றாலோ பரிதாபம்
நெட்டை என்னும் போது நகைப்பு
முக்குச் சப்பை, இடுங்கிய கண்கள்
மேட்டு நெற்றி , தூக்கிய பல்
என்று அடுக்கிக் கொண்டே
போகலாம் நெடுகிலும்
தெரியாத பலவினங்கள்
எத்தனை எத்தனையோ
மூடியும் மறைந்தும்
கண்டும் காணாமல்
நிறைகளை அறிந்து
நடப்பது நல்வாழ்வு.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (15-Oct-13, 9:47 am)
பார்வை : 45

மேலே