!!!குடித்தனம் !!!!

குடியும் புகையும்
ஒருபக்க குடித்தனம்

சீட்டும் பெண்ணும்
மறுபக்க குடித்தனம்

மனைவியும் மக்களும்
கண்ணீரோடு குடித்தனம் !!!!!

சிலனங்கைகளும் இன்று
போதையின் புதல்விகள்
அவள் பெற்றேடுத்த
புதல்வர்களோ மிடிமையின்
மடியில் உறங்குகிறார்கள் ......

"படிக்காதவர்கள் மட்டுமல்ல
படித்தவர்களும் கூட "

மப்பில் மண்டியிட்டு
குடிபோதையில்
குப்புறவிழுந்து கிடக்கும்
கிறுக்கர்களே என்றுதான்
திருந்த போகிறீர்களோ ??

ஏட்டில் எழுதி
புத்திபுகட்டும் நிலைமாறி
இணையத்தில் எழுதி
புத்திபுகட்டும் ஏளன
நிலை நின்றுவிடுமோ ..,
இன்னுமோர் தலைமுறைக்கு
எடுத்துசொல்ல உயரூடகம்
ஓன்று தேவைப்படுமோ ?

எழுதியவர் : ============ (15-Oct-13, 3:16 pm)
பார்வை : 84

மேலே