தென்றல் விடு தூது
அந்தி சாயும் நேரம் . . .
வந்தேன் மலையடிவாரம் . . .
வீசும் தென்றல் காற்று . . .
பேசியது என்னை பார்த்து . . .
மகிழ்ந்தும் விட்டேன் நானும் . . .
கொண்டேன் அதன் மேல் நேசம் . . .
உரிமையில் கொடுத்தேன் . . .
ஓர் விண்ணப்பம் . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
தென்றல் காற்றே . . .
அறிவாய் என் மனம் . . .
என்னவள் உன் இனம் . . .
செல்வாய் இக்கணம் . . .
சொல்வாய் என் மனம் . . .
இங்கனம் . . .
என்னுயிர்த்தோழி . . .
அறிவாய் ஓர் சேதி . . .
ஓர் மலையடி தோழி . . .
உன் மன்னவன் அங்கே . . .
அவன் நினைவுகள் இங்கே . . .
தவிக்கிறான் அங்கே . . .
நீயின்றி பெண்ணே . . .
முடிந்தது இலையுதிர்க்காலம் . . .
விடுப்பாய் ஊடல் இந்நேரம் . . .
தொடங்கியது வசந்த காலம் . . .
மன்னவனை அடைவாய் கணநேரம் . . .
சாமந்தி பூவும் மலரும் . . .
அவன் உயிர்க்கூடும் நிறையும் . . .
இரு இரு விழிகளும் பனிக்கும் . . .
ஒரு ஜோடி இதயமும் கோர்க்கும் . . .
உடல்கள் இரண்டாய் இருக்கும் . . . எனில்
உயிர்கள் ஒன்றாய் நிலைக்கும் . . . .
மொழிகள் இன்றி இருக்கும் . . .
நானும் நுழைய இடமின்றி இருக்கும் . . .
நாணியும் நானும் செல்வேன் . . .
சாமரம் வீசி செல்வேன் . . .
நீ என்னினம் கண்ணே . . .
விரைந்து செல்வாய் பெண்ணே . . .
மன்னவன் முடி காண ..
மலர் மாலை நீயும் சூட . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
இங்கனம் உரைப்பாய் என்னவளினமே . . .
பணிக்கிறேன் உமையும் இக்கணமே . . .