காதல் கதை
பார்த்த நொடியில் மனதில் ஒட்டிடும்
பளிங்கு முகமும்
பார்க்காமல் போனவளையும் சுண்டி இழுக்கும்
பனித்துளி கண்களும்
தேன் வடிக்கும் காந்தப் பந்துகளாக கருவிழிகளும்
அளவாக செதுக்கிய மூக்கும்
பாலாடைக் கட்டிகளாய் அடுக்கி வைத்த பற்களும்
பார்த்தவுடன் முத்தமிடத் தூண்டும் பவள வாயும்
புன்முறுவலுடன் தானும் முறுக்கிக் கொள்ளும் அரும்பு மீசையும்
சவரம் செய்த தாடையும்
காற்றில் பறந்து சிலிர்க்கும் முடியும்
அதில் பாதி மறைந்து தெரியும் காதுகளும்
ஒற்றைப் புருவம் உயிர்த்திய நெற்றியில்
பிரமன் எழுதிய அழகிய வரிகளும்
சட்டைக் கழுத்துப் பட்டையில்
மறைந்த கழுத்தும்,அதில்
எட்டிப் பார்க்கும் தொண்டையும்
முகம்புதைத்து நான் படுக்கப் பரந்த மார்பும்
மெல்லிய குரலில் இதயத் துடிப்பு தாலாட்டும்
உயர்ந்து நிற்கும் தோள்களும்
என் தங்க மகன்கள் தொங்கி விளையாட தேக்கு மரக் கைகளும்
பணியில் முக்கி எடுத்த குளிர்ந்த உள்ளங்கையும்
காளைக்கு இணையான கட்டுடலும்
கட்டான ஆறு அடுக்குகளும்
உடலைத் தாங்கும் இரு தூன்களாகக் கால்களும்
ஊரெல்லாம் சுற்றி வந்த உள்ளங்கால் ரேகைகளும்
அண்ணார்ந்து பார்க்க வைத்த ஆறடி உயரமும்
அவனை எனக்கு அடையாளம் காட்டின..
உருகி நின்ற என்னைப் பார்த்து,
உதட்டை விரித்து சிரித்தான்..
காத்திருந்த கோப்பையின் தேநீரைப் பருக,
காவியத்தில் சேர இன்னுமொரு காதல் கதை
ஆரம்பமானது இன்று!