முடிவில்லா நட்பு!!

மழலை மொழியில் கதைகள் சொல்லும்
பள்ளி வாழ்க்கை முற்று பெற்றது!

ஆயிரம் வண்ண கனவுகள்!
கண்களின் முன் நடனமாட
நாங்கள் காலெடுத்து வைத்தோம்
கல்லூரியில்!

முற்றிலும் வேறொரு உலகில்
புத்தம் புது உறவுகள் மலர்ந்திட
வகுப்பறையில் முதல் நாள்!

நாங்கள் வளர்ந்துவிட்டதை மறந்து
உணவூட்டும் பெற்றோர்!
தளராமல் பாடம் சொல்லும்
ஆசிரியர்!

துன்பத்திலும் தோள் கொடுக்கும்
நண்பர் கூட்டம்!
மனதை வருடி செல்லும்
தென்றல்!

வகுப்புகளில் அடித்த லூட்டிகள்!
ஒன்றாக அமர்ந்து பகிர்ந்த
உணவுகள்!
கை பிடித்து சுற்றி திரிந்த
நாட்கள்!

இத்தனை பொக்கிஷங்கள் நிறைந்த
எங்கள் கல்லூரி வாழ்க்கை!
இதோ முற்று பெருகிறது!

இனியும்!
என்றாவது ஒருநாள் எங்கோ ஒரு இடத்தில்! நாங்கள் சந்திக்க நேர்ந்தால்!

கண்களில் மறைக்கும் ஒரு துளி கண்ணீரில்! ஒரு விழி புன்னகையில்!
புதுப்பித்து கொள்வோம்
எங்கள் நட்பை!!

எழுதியவர் : மது (17-Oct-13, 6:32 pm)
பார்வை : 1320

மேலே