பெயர்களின் பொருள் அறிவோம்

மொழிகளை அறிந்து பொருளும் புரிந்தால்
பொழிந்திடும் அறிவு மழை மேகமாய்
சிந்தனை செய்திட சிலசொல் மட்டுமே
விந்தை விளைவிக்கும் வியந்திடும் வகையாய்

”அதாமா“ என்பது மண்ணே என்றும்
மனிதன் மண்ணால் ஆனவன் என்றும்
எபிரேய மொழியது ஆதி மனிதனை
அடையாளம் காட்டும் பெயர்ச்சொல்லாகும்.

சிந்தியா என்பது கிரேக்க இலக்கிய
சந்தியா காலத்து சந்திரன் ஆயினும்
சிந்தியா அதுவே வடமொழி தனிலே
கற்பனை என்றே கண்களைச் சிமிட்டும்.

அஞ்சனா இருளோ மையோ ஆனால்
கஞ்சனம் காஞ்சனம் புங்கமும் பொன்னும்
நிசாந்தம் என்பது வீட்டைக் குறித்தால்
நிசாந்தி வாழ்ந்திடும் பெண்னைக் குறிக்கும்.

அம்புயம் பதுமம் பங்கயம் தாமரை
அம்புஜம் என்று சமஸ்கிருதம் சொல்லும்
வடமொழி அதனில் சத்தியம் என்பதே
மடமென் தமிழில் தத்தியம் ஆகும்.

பயா என்பது பயத்தினைச் சுட்டினால்
நிர்பயா பயமது இல்லாமை ஆகும்
கல்பனா என்றால் கற்பனை செய்திடல்
களங்கம் இலாதது நிர்மலா ஆகும்.

குஷ்பூ நறுமணம் சுகந்தம் ஆயின்
குஷியது மகிழ்வில் கொண்டாடுதல் ஆகும்
கன்யா என்பது கண்ணிப் பெண்ணெனில்
சுகன்யா நல்ல கண்ணிப் பெண்ணாகும்.

நயன் என்பது விழிகள் ஆகும்
தாரா பொழியும் மழையென வழியும்
நயந்தாரா எனச்சேர்த்துச் சொல்லிட
கண்ணீர் மழையென கதையது சொல்லும்.

கமலம் என்பது தாமரை என்றால்
அதில் ஆசனம் கொண்ட மகாலட்சுமி
பத்ம வாசியென்றும் முக்தா என்றும்
அழகினைச் சொல்லும் அத்தனை வேதமும்.

இலலிதம் என்பது மென்மையைக் குறிக்கும்
இராகம் தாளம் ஓர்வகை ஆகிடும்
வெற்றியும் ஜெயமென ஒட்டிக் கொண்டால்
பற்றிய பகையினை சொடக்கிட்டு முறிக்கும்.
.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (18-Oct-13, 5:22 pm)
பார்வை : 788

மேலே