ஹஜ்ஜூப் பெருநாள்

மொட்டாகக் காத்திருந்து
பூத்ததந்த திருநாளே!
பூலோக யாத்திரிகள்
ஒரு சேரும் நன்நாளே!

இறையோனின் பரிசாக‌
இபுறாஹீம் நபியாலே
மறை ஏந்தும் மானிடர்க்கு
மகத்தான பொன் நாளே!!

அழும் குழந்தை பசியாலே,
அமைதி காக்க அதிசயமாய்,
சுட்டெரிக்கும் சுடு மண‌லில்
ஸம் ஸம் நீர் வந்ததுவே!!

மலை ரெண்டில் மதி கெட்டு
மாது அவள் அலைந்ததுவே
"தொங்கோட்டம்" தொனிப்பொருளில்
கடமையென மாறியதே!

பாவத்தின் பங்காளி
ஷைத்தானை சரித்து விட‌
கல் கொண்டே கல்லுக்கு
பிழை பொறுக்க வீசுவரே

ஐங்கடமை தன்னினிலே
இறுதியென வந்ததுவே!
பூலோக புனிதத்தை
பாதுகாத்து நின்றதுவே!!

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (20-Oct-13, 10:55 am)
பார்வை : 162

மேலே