இனி ஒரு விதி செய்வோம்

சுயநல வாரிசுகளால்
உதிரத்திலே வளர்த்து
நெஞ்சிலே சுமந்த
தெய்வங்களெல்லாம் தெருவிலே !!
தொப்புள் கொடியோடு உறவையும்
அறுக்கும் மிருகங்களால் நாளை
பூத்து பூங்காவனமாகும்
மழலைகளெல்லாம் குப்பையிலே !!
புறத்திலே புன்னகையும்
அகத்திலே அழுக்குமான
உறவுகளால் மன
நோயாளிகளெல்லாம் வீதியிலே !!
நாளுக்கு நாள் வீதிக்கு வீதி
இவர்கள் படும் இன்னல்களை
சொல்லி மாளாது ஆயிரம் ஆயிரம் !!
விதியினாலே பட்டுப்போன இந்த
மரங்களெல்லாம் பசியெனும்
அரக்கனின் பசியாற்ற
கையேந்துகிறது சாலையெங்கிலும் !!
ஆடையின்றி கந்தலும் கிழிசலுமாய்
பிறந்த மேனியுடன்
அரவணைக்க யாருமின்றி
வலம் வருகிறார்கள் தேசமெங்கிலும் !!
வயிற்ருக்கு யாசிப்போரை
வயிற்றில் அடிக்கின்றார்கள்
மன நோய் மங்கையவளின்
கற்ப்பை பறிக்கிறார்கள் !!
உறங்க இடமும் போர்வையுமின்றி.
மணக்க வேண்டிய இம்மலர்கள்
இறுதியில் மாண்டு போகின்றன
சாக்கடையிலும் சந்துகளிலும் !!
இனி ஒரு விதி செய்வோம் ..!!
யாரோ விதைத்த இவ்விதைகள்
நாதியற்றுக் கிடக்கின்றன நாடெங்கிலும் !!
கண்டும் காணாமல் போகாதீர்கள்
பக்குவமாய் பேசி அவர்களை
சேர்த்திடுங்கள் காப்பகத்தில் !!
ஒவ்வொரு மாவட்டத்திலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளன அந்த தொண்டு நிறுவனத்தின் தொலைபசி எண்கள் இணையதளங்களில் கிடைக்கும் முடிந்த அளவு அனாதையாக அலையும்.அபலைகளையும் , ஏழைகளையும்,குழந்தைகளையும், சிறுவர்களையும் பாதுகாப்பாக அங்கே சேர்த்து விடுங்கள்.