காதல் பார்வை!

பார்த்து கொண்டே இருக்க
ஆவல் தான்!
உன் காதல் சொட்டும் கண்களை!

நொடிகள் ஆயிரம் கடந்து போனாலும்
இமை தட்ட மறந்து
என் இதயம் ஊடுருவுகிறாய்!

விழிகளின் வழியே காதல் பாய்ச்சி
நித்தமும் என்னை
வசியம் செய்கிறாய்!

இமைகள் திறந்து
ஒரு நொடி நோக்கு!

காதல் ராட்சஸி
உன் பார்வையில்

சொக்கி கிடக்க
நான் விரும்புகிறேன்!

எழுதியவர் : மது (21-Oct-13, 1:27 pm)
பார்வை : 137

மேலே