நீ யாரோ ?

நீ யார் ?
வினவினேன் விடையில்லை !!

நீ அன்னையோ ?

அறியாமல் களைப்பில்
உன் மடியில் தலை சாய்க்க
தாலாட்டுகிறாய் !!

நீ நண்பனோ ?

தேவைகளை நீயறிந்து
தேடியவுடன் விடைத்தருகிறாய்
சோகத்திற்கு ஆறுதலாகவும்
சந்தோசத்தில் சங்கீதமாகவும்
என்னுடன் பயணிக்கிறாய் !!

நீ காதலியோ ?

என் விழிகள் இடைவெளியின்றி
ரசிக்கிறது உனை !!
விரல்கள் விளையாடுகிறது
கைகள் பற்றிக் கொள்ளுகிறது !!

நீ மனைவியோ ?

உனைக்காணாத நாட்கள்
நகர மறுக்கிறது
முப்பொழுதும் என்னருகில்
நீயிருக்க ஏங்குகிறேன் !!

நீ மழலையோ ?

கூடி விளையாடிடவும்
தனிமையில் விளையாடிடவும்
உன்னிடமில்லாத விளையாட்டு
உண்டோ ? நான் அறியேன் !!

நீ அறிஞனோ ?

வரலாறு அறிவியல் அண்டம்
இல்லை இல்லை இல்லை நீ
அறியாதது எதுவும்மில்லை
அனைத்துமே உன்னில் !!

நீ ஆசானோ ?

விளக்கமாக விவரிக்கிறாய்
பிழைகளை சுட்டிகாட்டுகிறாய்
தவறுகளை தட்டிக் கேட்கிறாய்
பின்னர் தெளிவாக பதிலுரைக்கிறாய் !!

நீ புலவனோ ?

இலக்கணமும் இலக்கியமும்
நூல்களும் கவிதைகளும்
உன்னுள் புதைந்துள்ளது !!

நீ எதிரியோ ?

இளைய தலைமுறைகள்
தீய வழியில் போகவும்
சில நேரங்களில் தீவிரவாதிக்கு
துணைப் போகிறாய் !!

இறுதியில் புரிந்தது
நீயின்றி நானில்லை
நான் உடல் நீ உயிர்
நான் இதயம் நீ துடிப்பு

ரத்தமும் சதையுமாய்
இரண்டுற கலந்துவிட்டாய்
என்னுள் அதனால் தான்
தினம் தினம்
தோளில் உனைச் சுமந்து
நடக்கிறேன் அலுவலகத்திற்கு !!

இன்று நீ
நவீன மந்திரம்
உன்னை போதிக்காதவர்
யாருமில்லை !!

நாளை நீயில்லாமல்
இவ்வுலகமில்லை !!

எழுதியவர் : தவமணி (21-Oct-13, 2:38 pm)
பார்வை : 1373

மேலே