வாழ்க்கையின் வசந்தகாலம் !!!!!!!!!!!!!!!!!!!!!

பள்ளி
முடித்து
கனவுகளுடன்
கல்லூரியில் நாங்கள்

அந்த பூக்கள்
சிந்திய சாலையில்
நடந்த
முதல் நாள்
இன்றும் நினைவில்

வகுப்பறையை விட
கல்லூரி கேண்டீனும்
மைதானமும்
எங்களை
நன்கு அறியும்

பாடங்கள்
கற்க வில்லை
வாழ்க்கையை
கற்க தொடங்கினோம்

ஒற்றை
நோட்டில் ஒரு
வருடத்தை முடித்தோம்

ஜெராக்ஸ் எடுத்தே
வீட்டின்
சொத்தை அழித்தோம்

எங்களின்
வில்லனாகவும்
துறையின்
அடியாளாகவும்
attendarkal

காதல் கடித்தை விட
மன்னிப்பு கடிதம்
அதிகம் எழுதினோம்

மகாராணியிலும்
இளையராணியிலும்
இளைபறினோம்

தேர்வு நெருங்கும்
வேளையில்
நூலங்ககளின்
வழிகள் கண்டோம்

தெரிந்த தேர்வை
விரைவாய் முடித்தோம்
தெரிய தேர்வை
தாமதமாய் முடித்தோம்

எங்களுக்க சமைத்து
வரும் தோழியின் உணவிலும்
அவர்கள்
கைப்பையின் தயவிலும்
காலம் தள்ளினோம்

நாங்கள் துறை
சார்ந்து பழகவில்லை
மனம் சார்ந்து பழகினோம்

சண்டையிலும்
கோபத்திலும்
எங்கள் நட்பினை
அடையாளம் கண்டோம்

எங்களுக்குள்
இருந்த
கலைஞனை
அடையாளம் கண்டோம்

எங்கள்
கலை தாகத்தை
என் கல்லூரி மேடையிலும்
பிற கல்லூரி மேடையிலும்
தணித்து கொண்டோம்

எதிர்காலத்தை
மறந்து இருந்தோம்
நிகழ்காலத்தை
ரசித்து இருந்தோம்

எங்களின்
அடையாளமாய்
இன்னும் இருக்கிறது
சில கோப்பைகளும்
மேஜை கிறுக்கல்களும்
பத்திரமாய் கல்லூரியில்

ஆயினும்
அந்த நாட்களின்
சந்தோசம்
மாறாத தழும்பாய்
மனதிற்குள்

கல்லூரிகாலம்
வாழ்க்கையின்
அழகிய
வசந்தகாலம் !!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது ) (22-Oct-13, 3:55 pm)
பார்வை : 247

மேலே